fbpx

தூங்கிக் கொண்டிருந்த பெண் திடீரென எழுந்து குடும்பத்தையே வெட்டிய கொடூரம்..!! காரைக்காலில் அதிர்ச்சி..!!

4 மாத குழந்தை, பாட்டியை மண்வெட்டியால் கொன்ற பெண், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்களையும் கொடூரமாக தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா லட்சுமி (35). இவர், பிரசவத்துக்காக, காரைக்கால் மாவட்டம் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் துர்காலட்சுமி, தனது 4 மாத பெண் குழந்தை தனுஸ்ரீ, தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), சகோதரர்கள் ஆண்டவர்(45), நடராஜன் (40) பாட்டி வேதவல்லி (85) ஆகிய அனைவரும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் துர்காலட்சுமி, வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து தூங்கி கொண்டிருந்த அனைவரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

தூங்கிக் கொண்டிருந்த பெண் திடீரென எழுந்து குடும்பத்தையே வெட்டிய கொடூரம்..!! காரைக்காலில் அதிர்ச்சி..!!

இந்த சம்பவத்தில் குழந்தை தனுஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், நடராஜன் காயங்களுடன் தட்டு தடுமாறி வீட்டை விட்டு வெளியில் வந்து, அருகில் வசிப்போரை உதவிக்கு அழைத்துள்ளார். இதற்கிடையே, துர்கா லட்சுமி தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் துர்காலட்சுமி உள்பட 6 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பாட்டி வேதவல்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துர்காலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

இன்று தேர்தல் நடந்தால்.. பாஜக ஆட்சியை தக்க வைக்குமா..? காங்கிரஸ் மீண்டும் வருமா..? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ..

Fri Jan 27 , 2023
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆம் ஆத்மி இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் […]

You May Like