மூதாட்டி ஒருவர் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையால் மீண்டும் ஓ.சி. பேருந்து சர்ச்சை சம்பவம் வெடித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விராலிமலைபட்டியில் லட்சமி என்ற மூதாட்டி ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அவர், தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்க வந்த பரிசோதகர் சுப்பிரமணியன் மூட்டையை பார்த்துவிட்டு உங்களுக்குத்தான் இலவசம், மூட்டைக்கு இல்லை என கூறிவிட்டு ரூ.15 கட்டணமாக வசூலித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த டிக்கெட் பரிசோதகர். ’’ஓ.சியில் வந்தால் மூட்டை மூட்டையாய் கொண்டு வருவாயா என கேட்டுள்ளார்’’. மூட்டையை பார்த்துவிட்டு இந்த வெண்டைக்காய் மூட்டை கிட்டத்தட்ட 50 கிலோ இருக்கும் என்று கூறிவிட்டு அதற்காக ரூ.50 வசூலித்துள்ளார். இதனால் மன வேதனைக்கு ஆளான மூதாட்டி உசிலம்பட்டியில் இறங்கி பேருந்து நடத்துனர் மீதும் உசிலம்பட்டி கால் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வெண்டைக்காய் மூட்டையை போலீசார் சரி பார்த்தனர். மூட்டை வெறும் 24 கிலோ மட்டுமே இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து துறை ரீதியில் பரிசோதகர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைப்போம் என்று தெரிவித்தனர்.
ஓ.சி. பயணம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் அரசு போக்குவரத்து ஊழியர்களின்இது போன்ற பேச்சும் அவமதிக்கும் செயலும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.