மத்திய பிரதேசத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
மத்திய பிரதேசம் மாநிலம் தார் அருகே கல்காட்டில் பாலத்தில் இருந்து நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.. இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.. பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு ஆற்றில் பேருந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. சுமார் 15 பேர் பயணித்த இந்த பேருந்தில் இருந்து இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரதேச ஆணையர் டாக்டர் பவன் குமார் ஷர்மா, தார்-கார்கோன் மாவட்டங்களின் இரு மாவட்ட ஆட்சியர்களையும் சம்பவ இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கார்கோன் கலெக்டர் குமார் புர்ஷோத்தம், எஸ்பி தரம்வீர் சிங் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்..
பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.. பாலம் அதிக உயரத்தில் இருப்பதாலும், அப்பகுதியில் மழை பெய்து வருவதாலும் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும் பேருந்தை முழுமையாக வெளியே எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன..