fbpx

இன்றுடன் பிரச்சாரம் நிறைவு…! மே 7 மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.

18-வது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகிறது.

மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பேட்டுல் தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்பு மனுக்களைத் திரும்ப பெற 2024, ஏப்ரல் 22 கடைசி தேதியாக இருந்தது.

பேட்டுல் தொகுதி உட்பட மொத்தம் 2963 வேட்பு மனுக்கள் தாக்கல செய்யப்பட்டு இருந்தன. பரிசீலனைக்குப் பின் 1563 வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன. மூன்றாம் கட்டத் தேர்தலில் குஜராத்தின் 26 தொகுதிகளில் அதிகபட்சமாக 658 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவின் 11 தொகுதிகளின் 519 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மொத்தம் 1563 வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டு களத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

Result: நாளை வெளியாகும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...! இணையத்தில் எப்படி பார்ப்பது...?

Sun May 5 , 2024
நாளை 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது‌. தமிழகத்தில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரையில் தேர்வு நடைபெற்றது. தேர்வு தாள் திருத்து பணியானது 88 முகாம்களில் 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஏப்ரல் 12-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது‌. தேர்வு […]

You May Like