பெண் எஸ்.பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்..
பெண் எஸ்பி ஒருவரிடம் சிறப்பு டிஜிபி பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… இதையடுத்து சம்மந்தப்பட்ட டிஜிபி, மற்றும் அவருக்கு உதவிய எஸ். பி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சர்ச்சை பூதாகரமான நிலையில், வழக்குப்பதிவு, சிபிசிஐடி விசாரணை, நீதிமன்ற விசாரணை என அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தின..
இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிவடைந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி, கண்ணன் ஆகியோர் மீது 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இதையடுத்து இருவருக்கும் கடந்த ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. இதனிடையே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி கோரியிருந்தார்.. ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது..
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.. முன்னாள் சிறப்பு டிஜிபி பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் போன்ற ஆவணங்கள் காணமால் போனதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.. மேலும்காணாமல் போன ஆவணங்களின் நகலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க சிபிசிஐடிக்கு விழுப்பரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..