fbpx

நீட் விலக்கு தொடர்பாக விளக்கம் கேட்ட மத்திய அரசு..! விவரங்களை விளக்க வேண்டும் தமிழக அரசு..! அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று தமிழக அரசு விளக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துகளை கூறியிருப்பதாகவும், அவை குறித்த விளக்கங்களைக் கோரி தமிழ்நாடு அரசுக்கு அவற்றை அனுப்பி வைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு விளக்கம் கோரி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்ட நிலையில், அது குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடமும், மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்”.

நீட் விலக்கு தொடர்பாக விளக்கம் கேட்ட மத்திய அரசு..! விவரங்களை விளக்க வேண்டும் தமிழக அரசு..! அன்புமணி ராமதாஸ்

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய உள்துறையின் இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, ”குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர்களால் அனுப்பி வைக்கப்படும் சட்டங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஒப்புதலுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படும். நீட் சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து சில கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவற்றிற்கான தமிழக அரசின் விளக்கங்களை பெறுவதற்காக முறையே ஜூன் 21, 27ஆகிய தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விஷயங்களில் கலந்தாய்வு நடைமுறை அதிக காலம் நீடிக்கும். எனவே, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலவரை கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்.

நீட் விலக்கு தொடர்பாக விளக்கம் கேட்ட மத்திய அரசு..! விவரங்களை விளக்க வேண்டும் தமிழக அரசு..! அன்புமணி ராமதாஸ்

மத்திய அமைச்சரின் பதில் இரு வழிகளில் ஏமாற்றம் அளிக்கிறது. முதலாவதாக நீட் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு நினைத்தால் நீட் விலக்கு சட்டத்திற்கு இந்நேரம் ஒப்புதல் அளித்திருக்க முடியும். நீட் விலக்கு சட்டத்திற்கு சுகாதாரம், ஆயுஷ் ஆகிய இரு அமைச்சகங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதன் மூலமாக மட்டும் தான் மாணவர்களின் தற்கொலைகளையும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியையும் தடுத்து நிறுத்த முடியும். எனவே, நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். அத்துடன் மத்திய அரசின் கருத்துகள் குறித்த விளக்கங்களை உடனடியாக அனுப்பி வைத்து நீட் விலக்கு சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்..! மத்திய அரசு பகீர் தகவல்..!

Wed Jul 20 , 2022
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் அறிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று காணொலி வாயிலாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் அதிகரித்து […]

You May Like