உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கண்காணிப்பை பலப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.
அதேபோல மாவட்ட அளவிலான கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பண்டிகை காலங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், உபகரணங்களை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
முன்கள பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், உபகரணங்களை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.