fbpx

41 மருந்துகளின் விலையை குறைத்த மத்திய அரசு!

சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் 41 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலையை விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

41 மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் 6 மருந்துகள் சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுபவையாகும். அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக என்பிபிஏ-ன் 143வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து,, மருந்துகள் துறை மற்றும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆன்டாசிட்கள், மல்டி வைட்டமின்கள் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் ஆகியவை மலிவு விலை மருந்துகளாகும். இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு மருந்துகளின் விலை குறைப்பு குறித்த தகவல்களை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு தெரியப்படுத்த மருந்து நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் விலைக் குறைப்பால் நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!! மத்திய அரசு கொடுத்த முக்கிய வார்னிங்..!!

Next Post

அதிகரிக்கும் நீர்வரத்து..!! 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Thu May 16 , 2024
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில், வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக நீர்திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10ஆம் தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 5 நாட்களாக […]

You May Like