மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: இந்த கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2025க்கான மொத்தப் பதவிகளின் எண்ணிக்கை 1,161 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் 2025க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன் (10ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்குச் சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக, அவர்கள் அந்தந்த வர்த்தகத்தில் தொடர்புடைய துறையில் அனுபவம் அல்லது தொழில்துறை பயிற்சி நிறுவனத்திடமிருந்து (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு , CISF வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர்களுக்குச் செய்முறை அனுபவமும் தேவைப்படலாம்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.08.2025 தேதிப்படி 18 வயது முதல் 23 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும், விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்: கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் உடல் பரிசோதனை, எழுத்துத் தேர்வு, வர்த்தகச் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஆகும்.