fbpx

மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை கையிலெடுத்த சென்னை நிறுவனம்..!! ஊழியர்கள் கடும் அதிர்ச்சி..!!

மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருடாந்திர சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்த நிலை, வர்த்தக சரிவு ஆகிவற்றால் செலவின குறைப்பு நடவடிக்கையை முன் வைக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் செலவின குறைப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கை என எந்த நடவடிக்கையை நிறுவனங்கள் எடுத்தாலும் அதில் முதல் விஷயமாக வருவது பணிநீக்கம் தான்.

அந்த வகையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் EdTech ஸ்டார்ட்அப் நிறுவனமான Skill-Lync பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டியும், தனது சென்னை, பெங்களூரு, ஹைதரபாத் ஆப்ரேஷன்ஸ்-ஐ ஒருங்கிணைக்கும் காரணமாகவும் பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனமான Skill-Lync-ன் இந்த பணிநீக்கத்தில் குறைந்தது 300 – 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்த பணிநீக்க சுற்றில் Skill-Lync நிறுவனம் சேல்ஸ், மார்கெட்டிங், டெக் மற்றும் ஹெச்ஆர் அணிகளில் பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளும் சேவையை வழங்கி வருகிறது.

Skill-Lync நிறுவனத்தில் தற்போது 30,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். Skill-Lync தளத்தில் இருக்கும் கோர்ஸ் அனைத்தும் உலகின் முன்னணி தொழிற்துறை முனைவர்கள் உருவாக்கியது. கடந்த 2 வருடத்தில் Skill-Lync தளம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தது. ஏப்ரல் 2015ல் Skill-Lync நிறுவனத்தை தற்போது இந்நிறுவனத்தின் சிஇஓ-வான சூர்ய நாராயன் மற்றும் சிடிஓ-வாக இருக்கும் சாரங்கராஜன் வி ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கினர். இன்றைய இன்ஜினியரிங் கல்வி முறையில் தரமான, அனுபவம் அடிப்படையிலான கல்வி மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளதை கண்டறிந்து இந்த Skill-Lync நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

சென்னையை சேர்ந்த Skill-Lync நிறுவனத்தில் தற்போது சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சுமார் 2,000-க்கும் அதிகமான ஊழியர்கள் நிறுவனத்தின் பல மட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணிநீக்கம் அறிவிப்பு மூலம் சுமார் 300 முதல் 400 ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளனர். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் நோட்டீஸ் காலத்திற்கு இணங்க severance pay அளிக்கப்பட உள்ளது.

Chella

Next Post

ஆடியோ விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் பாஜக…..! பி.டி.ஆர் விளாசல்…..!

Thu Apr 27 , 2023
தமிழகத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர் பேசியதாக 2 ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜகவின் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்திற்கு தற்போது வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் இது போன்ற போலியான ஆடியோக்களை […]
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியா..? சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

You May Like