fbpx

#Tax: “சூப்பர் நியூஸ்” இனி நீங்க சொத்துவரி கட்ட அலைய வேண்டாம்…! மொபைல் மூலம் ஆன்லைனில் நீங்களே செலுத்தலாம்…!

சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி அல்லது இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு, இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி உயர்வாக உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டவைகளுக்கு, அவற்றிற்கு அருகாமையில் உள்ள முந்தைய மாநகராட்சி பகுதிகளைவிட, சொத்துவரி அடிப்படை தெரு கட்டணம் அதிகமாக இல்லாதவாறு நிர்ணயம் செய்ய, அனுமதி பெறப்பட்டு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு மேற்குறிப்பிட்டவாறு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுசீராய்வு அறிவிப்புகள் தபால்துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு ஜூன் 27-ம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகளில், முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி ஆகிய விவரங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொது சீராய்வின்படி சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் வகையில், சீராய்வு அறிவிப்புகளில் tiny.url மற்றும் QR Code ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன்/ பற்று அட்டை மூலமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் (Nil Transaction fee) சொத்துவரி செலுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Tamilnadu Open University: இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

#TnGovt: ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...! முழு விவரம் உள்ளே...

Sun Jul 3 , 2022
மதுரையில் செயல்பட்டு வரும் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் தரவு பதிவு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இளங்கலை அறிவியல் வேளாண்மை அல்லது தோட்டக்கலை முடித்து வெளிநாட்டு வர்த்தகம் அல்லது உலகளாவிய வர்த்தகம் போன்றவற்றில் முதுநிலை வணிக நிர்வாகம் அல்லது வேளாண் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் […]
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்..! விரைவில் வெளியாகும் அரசாணை..! தமிழக அரசு அறிவிப்பு

You May Like