fbpx

தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரை கனமழை…! இந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் கவனமா இருங்க..! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தின் மேல் தற்போது வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 18-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Yuan Wang 5: இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் உளவுக் கப்பல்...! அனுமதி கொடுத்த இலங்கை...! தயார் நிலையில் இந்தியா...!

Tue Aug 16 , 2022
யுவான் வாங் 5 என்னும் சீனாவின் உளவுக் கப்பலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால்; நம் அண்டை நாடான இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீனாவின், ‘யுவான் வாங் 5′(Yuan Wang 5) என்ற உளவுக் கப்பல், வரும் 22 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி […]

You May Like