fbpx

மக்களே…! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 25-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடுத்த ஆப்பு...! ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த வாகன பதிவு ரத்து செய்யப்படும்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Sun Jan 22 , 2023
மத்திய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த புதிய உத்தரவு ஏப்ரல் […]

You May Like