fbpx

மக்களே எல்லாம் உஷாரா இருங்க… வரும் 8-ம் தேதி வரை இந்த பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழ்நாடு – ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 8-ம் தேதி வரை: லட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: “அறிய வாய்ப்பு” ஆசிரியர்களுக்கு மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்…! நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

Vignesh

Next Post

கொரோனா வைரஸை கொல்லும் புதிய வகை மாஸ்க்.. விஞ்ஞானிகள் சொன்ன குட்நியூஸ்...

Tue Jul 5 , 2022
கொரோனா வைரஸை கொல்லும் புதிய வகை N95 முகக்கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்… பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை.. முதலில் பாதிப்பு குறைவதும், பின்னர் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. எனவே கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் புதிய […]

You May Like