fbpx

இளைஞரின் உயிரை காப்பாற்றிய சிக்கன்..!! மருத்துவமனையில் நடந்த அதிசயம்..!!

தைவான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கனால் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில விஷயங்களை கேட்கும் போது நமக்கு இது போன்ற செயல்கள் உண்மையில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழும். அப்படி ஒரு அதிசய விஷயம் தான் தற்போது தைவான் நாட்டில் நடந்துள்ளது. தைவான் நாட்டின் Hsinchu County என்ற பகுதியில் ஜூலை மாதம் நடைபெற்ற விபத்தில் பைக்கில் சென்ற 18 வயது இளைஞர் பலத்த காயமடைந்தார்.

சிஹு எனப்படும் அந்த இளைஞர், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் அதிர்ச்சி இளைஞர் சிஹுவை கோமோவிற்கு தள்ளியுள்ளது. 62 நாட்கள் கடந்த நிலையில், தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. அதாவது சிக்கன் என்ற ஒரே வார்த்தை அந்த இளைஞரை கோமாவில் இருந்து சுய நினைவுவிற்கு திரும்ப உதவியுள்ளது.

இது குறித்து சிஹுவின் அண்ணன் கூறுகையில், கோமாவில் இருந்து அவனுக்கு சிக்கன் பில்லெட் என்றால் ரொம்ப இஷ்டம் என சொன்னவுடன் சிஹுவின் நாடி துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பித்தது என்றார். மேலும், சிக்கன் குறித்து பேசிய பிறகு நிதானமாக சிஹு சுய நினைவுக்கு வர ஆரம்பித்தார் என்றார். மறுபிறவி அடைந்துள்ள அவர் இதனை மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Chella

Next Post

ஓ..!! இதுக்குதான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Sat Nov 11 , 2023
பொதுவாக தீபாவளி தினத்தன்று விடியற்காலையில், வீட்டில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு சடங்கு. இது வெறும் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல, இது உடல் மற்றும் ஆன்மாவின் ஆன்மீக தூய்மை என்று கூறப்படுகிறது. இது சூரியன் உதிக்கும் முன், அதிகாலையில் எழுந்து, தூய்மை மற்றும் பக்தியுடன் பண்டிகையை வரவேற்பதைக் குறிக்கிறது. எள் எண்ணெய், அதன் சிகிச்சை பண்புகளுக்கு பெயர் பெற்றது, பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், சந்தன […]

You May Like