fbpx

பரபரப்பு…! இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி…! பாஜகவுடன் இரவோடு இரவாக நடந்த பேச்சுவார்த்தை.‌.!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். பாஜக உடன் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏற்கனவே போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக உடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக, அமமுக இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதே நேரத்தில் ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடத்தினார். ஓ.பி.எஸ். உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பாஜக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக பெற்றுள்ளது. பாஜக உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது. பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறினார்.

பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Vignesh

Next Post

Aadhaar Card அலெர்ட்!… நாளையுடன் முடிவடையும் அவகாசம்!… வெளியான முக்கிய அறிவிப்பு!

Wed Mar 13 , 2024
Aadhaar Card: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் நாளையுடன்(மார்ச் 14) முடிவடையவுள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். வங்கி கணக்குகள், பெரும்பாலான அரசு சம்பந்தப்பட்ட இடங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதார் அவசியம். ஏதேனும் சிக்கல்களைத் தவிர்க்க, அதில் உள்ள தகவல்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். தரவுகளின் துல்லியத்தை உறுதிசெய்ய, […]

You May Like