fbpx

TRB: ஆன்லைன் மூலம் வரும் ஜனவரி 31-ம் முதல்…! தேர்வாணையம் புதிய அறிவிப்பு…! எல்லாம் தயாரா இருங்க…!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கு கணினி வழித்தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வாணையத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்போது ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2-க்கு உரியத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கணினி வழித் தேர்விற்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வுக்கான அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விபரம் , தேர்வு கால அட்டவணை ஜனவரி 3-ம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்த வாகனங்களை இயக்க தடை..! காற்று மாசு ஏற்படுவதால் அரசு அதிரடி அறிவிப்பு...

Tue Jan 10 , 2023
டெல்லியில் பெருகி வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ் 3, மற்றும் பிஎஸ் 4   வாகனங்களுக்கு தடை விதித்து  அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும், கடந்த 2017  முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை […]

You May Like