fbpx

சற்று நேரத்தில் தொடங்கும் தவெக மாநாடு..!! 19 தீர்மானங்கள் நிறைவேற போகுது..!!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்தே இன்று அதிகாலை முதலே விக்கிரவாண்டிக்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் காலை 11 மணியளவிலேயே மாநாட்டுத் திடலில் இருந்த பார்க்கிங் வசதி நிரம்பியது. இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர். மாநாட்டுத் திடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தொண்டர்கள் நடந்து வருகின்றனர்.

வி.சாலை பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலையிலேயே உணவு தீர்ந்துவிட்டதால், அப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதாகத் தெரிகிறது. இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு மாலை 6 மணிக்கு மாநாடு தொடங்கவிருந்த நிலையில் மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக மாநாட்டுக்கு கைக்குழந்தைகள், முதியவர்களை அழைத்து வர வேண்டாம் என விஜய் வலியுறுத்திய நிலையிலும், விஜய்யை பார்க்க வந்தோம், உள்ளேவிடாவிட்டால் தர்ணாவில் ஈடுபடுவோம் என்று குழந்தையுடன் வந்திருந்த பெண் தெரிவித்திருக்கிறார். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்படுகின்றன. செஞ்சி புறவழிச்சாலையில் இருந்து கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

இந்த மாநாட்டில் விஜய் கல்வி, விவசாயம், பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார் எனக் கூறப்படுகிறது. விஜய்யின் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

Read More : விஜய் மாநாட்டில் வெடித்த சர்ச்சை..!! தண்ணீரை தூக்கி வீசுவதால் பரபரப்பு..!! கழிவறை தண்ணீரை குடிக்கும் அவலம்..!!

English Summary

It is said that Vijay will speak in this conference with emphasis on education, agriculture and women’s progress. It is said that 19 resolutions may be passed in Vijay’s conference.

Chella

Next Post

உண்மை ஒரு நாள் வெல்லும்.. கடந்த 37 நாட்கள் என்றும் என் இதயத்தை துளைக்கும்..!! - ஜானி மாஸ்டர் பதிவு

Sun Oct 27 , 2024
Truth will win one day.. Last 37 days will pierce my heart forever..!! - Johnny Master

You May Like