கரூரில் சாலையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் உள்ளே செல்ல முடியாதவாறு மரங்களைச் சுற்றி தார் சாலை அமைத்த நல்ல மனம் படைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கோவை சாலை திருக்காம்புலியூர் வரை தார் சாலை போடும் வேலை நடந்து வருகிறது. சாலையின் இருபுறமும் நிழலுக்காக வைக்கப்பட்டிருக்கும் மரங்கள் மீது தார் ஊற்றி மரத்திற்கு தண்ணீ செல்லாதவாறு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொதிக்கும் தாரினை ஊற்றி அந்த மரங்களை அழிக்க முயற்சிக்கும் ஒப்பந்ததாரரின் செயலை கண்டித்து, மேலும் அதை கண்டுகொள்ளாத மாவட்ட நெடுஞ்சாலைத்துறையை கண்டித்தும் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினரால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.