fbpx

உடனடியாக அனைத்து சாலை பணிகளையும் நிறுத்த வேண்டும்…! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!

சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலையை தோண்டும் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகளாகிய சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுகள் அனைத்தும் 20.09.2023 அன்றுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை இன்று முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது‌. மேலும் இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டு மேற்கொள்ள இணை ஆணையர் (பணிகள்), வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) அவர்களின் மூலமாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரயில் விபத்து!… ரூ.5 லட்சம்!... நிவாரண தொகை 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்!... ரயில்வே வாரியம் அதிரடி!

Thu Sep 21 , 2023
ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண தொகையை மேலும் கூடுதலாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் உறவினர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை நிவாரணத் தொகையை இப்போது திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேனுவல் லெவல் கிராசிங் கேட் […]

You May Like