fbpx

“பாஜக ஆட்சியின் முடிவுக்கான Count Down ஆரம்பமாகிவிட்டது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லோக்நிதி ஆய்வு அமைப்பு வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை குறிப்பிட்டு பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல லோக்நிதி ஆய்வு அமைப்பு,  2024 மக்களவைத் தேர்தல் களத்தின் முக்கியப் பிரச்னைகள் எவை என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. வேலைவாய்ப்பின்மை,  பணவீக்கம் உள்ளிட்டவை நாட்டின் முக்கிய பிரச்னைகளாக இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன

இந்நிலையில் லோக்நிதி அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “புகழ் பெற்ற லோக்நிதி ஆய்வு அமைப்பு,  2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. 

அதில், 27% பேர் வேலைவாய்ப்பின்மை தான் முக்கியப் பிரச்சினை என்றும்,  23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,  55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,  ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது.

அதிகரித்துவிட்ட ஊழல்,  கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்,  பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.  ‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!” என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டார்.

Next Post

பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்..!! ரூ.25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்..!! பெற்றோர்களே நோட் பண்ணுங்க..!!

Fri Apr 12 , 2024
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பலவிதமான பாலிசிகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகளின் நலன் கருதி கன்யாடன் பாலிசியை அளித்து வருகிறது. இத்திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் ஒரு வயது முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். 13 முதல் 25 ஆண்டுகள் வரை இந்த பாலிசியின் காலம் ஆகும். பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் செலுத்தலாம். 25 ஆண்டு பாலிசியை தேர்வு செய்தால், 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் […]

You May Like