fbpx

கடலை கொடுக்க சென்ற சிறுமியை கடத்திச் சென்ற கொடூரன்..!! காட்டுக்குள் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம்..!!

திருத்தணி அருகே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாமநெறி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் ஏழுமலை வேர்க்கடலை பயிர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று தோட்டத்தில் அறுவடை செய்யும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலரும் சிறுமி ஒருவரும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு பஞ்சாட்சரம் என்பவர் வேர்க்கடலை வேண்டும் என கேட்டுள்ளார். நிற்க முடியாத போதையில் தள்ளாடியபடி வந்த அவரிடம் சிறுமி ஒருவர் வேர்க்கடலை கொடுப்பதற்காக அருகே சென்றுள்ளார்.

கடலை கொடுக்க சென்ற சிறுமியை கடத்திச் சென்ற கொடூரன்..!! காட்டுக்குள் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம்..!!

அப்போது குடிபோதை கண்ணை மறைக்க தான் என்ன செய்வதென்று தெரியாத அந்த குடிபோதை கொடூரன், திடீரென சிறுமியை ஆளில்லாத வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். இதனால், பயந்து போன அந்த சிறுமி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிடவே சத்தம் கேட்டு அருகில் இருந்து வந்தோர் அந்த கொடூரனை சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், அச்சத்தில் உறைந்து போயிருந்த சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காமக்கொடூரன் பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

கேரளாவில் அன்னபிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்த ’சைவ’ முதலை உயிரிழந்தது!

Mon Oct 10 , 2022
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கோவில் அமைந்துள்ள குளத்தில் , அன்னபிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். காசர்கோடு கோவிலில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் உள்ள குளத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதலை வாழ்ந்து வந்தது. ’பாபியா ’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த முதலை இதுவரை அசைவ உணவுகளே சாப்பிட்டது கிடையாதாம். கோவிலில் வழங்கப்படும் அன்னபிரசாதம் மட்டுமே […]

You May Like