fbpx

”டெய்லியும் குடிச்சிட்டு வந்து டார்ச்சர் பண்றான் சார்”..!! கணவரின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த மனைவி..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா (45). இவரது மனைவி பச்சையம்மாள் (43). இவர்களது மகன் பாலமுருகன் (23), மகள் பானுப்பிரியா (21) ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலைபார்த்து வரும் நிலையில், மகள் பானுப்பிரியாவுக்கு தாமரைக்குளம் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், சின்னப்பா, அவரது மனைவி பச்சையம்மாள் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவர் சின்னப்பா தினமும் குடித்துவிட்டு, பச்சையம்மாளை துஷ்பிரயோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் பிரச்சனை செய்ததால் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று காலை சின்னப்பா ரத்த வெள்ளத்தில் இரண்டு கை, கால் நரம்புகள் அறுக்கப்பட்டும், பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரும்புலிக்குறிச்சி போலீசார், சின்னப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சின்னப்பாவின் மனைவி பச்சையம்மாளை கைது செய்து விசாரித்தபோது, ​​கணவர் சின்னப்பா அடிக்கடி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், அதனால் தான் அவரை கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : குழந்தை வேண்டி உயிருள்ள கோழியை விழுங்கி பரிகாரம்..!! மாந்திரீக சடங்கால் நிகழ்ந்த விபரீதம்..!!

English Summary

When Chinnappa’s wife Pachaiyamma was arrested and interrogated, she confessed that her husband Chinnappa often drank and abused her, which is why she killed him.

Chella

Next Post

சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..!! - திருவிதாங்கூர் தேவஸ்தம்போர்டு

Wed Dec 18 , 2024
Relief to the family of devotees who die of natural causes at Sabarimala..!!

You May Like