fbpx

கேரளா அரசு கட்டும் தடுப்பணை… பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்..! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி(பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் அரசின் சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

Vignesh

Next Post

ஏர் கூலரால் ஏற்படும் பிரச்னைகள்!! சமாளிக்க எளிய டிப்ஸ் இதோ!!

Fri May 24 , 2024
ரூம் கூலர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய ஈரப்பதம் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றில் இருந்து விடுபட எளிய வழிமுறை இதோ! வீட்டில் ஏர் கூலர் பயன்படுத்தும்போது அறை ஏர்கூலர் அல்லது வெளிப்புற ஏர்கூலரை இயக்கும்போது ஈரப்பதமும், ஒட்டும் தன்மையையும் ஏற்படுத்தும்.கோடை வெயிலை சமாளிக்க வீடுகளில் சிலர் ஏசியை நாள் முழுவதும் இயக்குகிறார்கள்.மற்ற சிலர் கூலர்கள் மற்றும் மின்விசிறிகளை இயக்கி வருகின்றனர். ரூம் கூலர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய ஈரப்பதம் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. […]

You May Like