fbpx

’’இறந்துகிடந்த ஷ்ரத்தா என்னை பார்த்து சிரித்தாள்’’-அலறவிட்ட அஃப்தாப்!!

டெல்லியில் கொலை செய்துவிட்டு காதலியின் உடலை 35 பாகங்களாக கூறுபோட்ட காதலனிடம் நடத்திய விசாரணையில் ’’இறந்துகிடந்த ஷ்ரத்தா என்னை பார்த்து சிரித்தாள்’’ என தெரிவித்ததால் போலீசே அலறிவிட்டனர்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மும்பையில் வசித்த ஷ்ரத்தா ஃபேஸ்புக்கில் காதலை பரிமாறி காதலனுக்காக வீட்டை விட்டு டெல்லிக்கு வந்தார். ஆனால் டெல்லியில் காதலன் அஃதாப்பிடம் திருமணம் பற்றி பேசியபோதுதான் பிரச்சனை வெடித்தது. ஆத்திரமடைந்த அஃப்தாப் காதலியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு உடலை மறைக்க 300 லிட்டர் ஃபிரிட்ஜ் ஒன்றையும் வாங்கியுள்ளார். காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை மாநகரில் காட்டுப்பகுதிகளில் வீசியுள்ளார். இது தொடர்பாக ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து 6 மாதங்களுக்கு பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் 2 மணிக்கு வாக்கிங் செல்வது போல இரண்டு பாகங்களை கொண்டு சென்று வீசிவிட்டு யாருக்கும் தெரியாதவாறு வந்து படுத்து உறங்கியுள்ளான். இதை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று நடத்தப்பட்ட விசாரணையில் அஃப்தாப் சில உண்மைகளை கூறியுள்ளான்.

 மேலும் அஃப்தாப் சைக்கோவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அஃப்தாபை அறையில் பல கேமராக்கள் வைத்த 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. விசாரணையின்போது அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாகஇருந்ததாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று விசாரணையில்’’ஷ்ரத்தாவை எளிமையாக கொன்றுவிட்டேன். ஆனால், அவள் உடலை அப்புறப்படுத்துவதுதான் போதும் என்றாகிவிட்டது. ஷ்ரத்தாவை நான் கொன்றுவிட்டேன், இறந்துபோன அவள் என்னைப்பார்த்து அவள் சிரித்தாள்.’’ என்றதும் போலீசே அலறிவிட்டனர்.

என்ன என மேலும் அவர் கூறுகையில் சற்று கேப் விட்டு அஃப்தாப்பேசினார்…’’அது ஷ்ரத்தாவின் தலைதான் ஃபிரிட்ஜில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்’’ என கூறினார். இதனால் அவர் சைக்கோதான் என்பது ஓரளவுக்கு நிரூபணம் ஆகியிருந்தாலும் தொடர்ந்து அஃப்தாபை கண்காணித்து வருகின்றனர்.

Next Post

பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த இளம்பெண் … பரபரப்பு வீடியோ!!

Wed Nov 16 , 2022
அவுரங்காபாத்தில் பாலியல் தொல்லை தர முயன்றதால் இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத்தில் பெண் ஒருவர் ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்தார். இதையடுத்து பலத்த காயம் அடைந்து சாலையில் விழுந்த அவரை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி அவரிடம் விசாரித்தபோது ஆட்டோவில் சென்றபோது ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் அதிவேகத்தில் ஆட்டோ ஓட்டினார். […]

You May Like