fbpx

‘தொடரும் துயரம்..’ விஷச் சாராயம் குடித்த மேலும் 2 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார்(37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே 59 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் தற்போது 60-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read more ; சாதிவாரி கணக்கெடுப்பு | மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனி தீர்மானம்!

English Summary

The death toll has risen to 61 following the death of two more people who were being treated for alcohol poisoning in Kallakurichi.

Next Post

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு!! யார் இந்த ஓம் பிர்லா? பின்னணி இதோ..

Wed Jun 26 , 2024
BJP-led NDA alliance candidate Om Birla was elected as the 18th Lok Sabha Speaker. He was elected as the new Speaker by voice vote.

You May Like