fbpx

தோளில் கை வைத்த தொண்டரை அறைந்த துணை முதல்வர்!… வீடியோவை வெளியிட்ட பாஜக!… அரசியலில் சலசலப்பு!

DK Shivakumar: பிரச்சாரத்தின்போது, தோளில் கை வைத்த தொண்டரை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்றை பாஜக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி மூன்றாம் கட்ட பிரச்சாரம் முடிவடைய உள்ளது. அந்தவகையில், கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரில் சவானூர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினோடா அசூட்டி என்பவருக்கு ஆதரவு தெரிவித்து துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தோளில் கை வைத்த காங்கிரஸ் தொண்டரை துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்றை பாஜக கட்சி ஐ.டி. பிரிவு தலைவரான அமித் மாளவியா, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், காரில் இருந்து வெளியே வரும் சிவக்குமாரின் தோளின் மீது கட்சி தொண்டர்களில் ஒருவர் கை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், தொண்டரின் கையை தள்ளிவிட்டு அவரை அறைந்துள்ளார்.

சிவக்குமார் அறைந்த அந்த நபர் நகராட்சி உறுப்பினர் அல்லாவுதீன் மணியார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், அமித் மாளவியாவின் அந்த பதிவில் காங்கிரஸ் தொண்டர்கள் இன்னும் காங்கிரசுக்காக பணியாற்ற வேண்டும் என ஏன் விரும்புகின்றனர்? என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர்களுடைய தலைவர்கள் அறைகின்றனர். அவமதிப்பு செய்கின்றனர். போட்டியிட வாய்ப்பு தருவதில்லை, ஊழல் பணத்திற்காகவா அவர்களின் பக்கம் நிற்கின்றனர்? சுயமரியாதை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Readmore: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சூப்பர் வேலை..!! ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Kokila

Next Post

மோடி அரசில் வேலைவாய்ப்பு சாதனை படைத்துள்ளது!… வேலையில்லா திண்டாட்டம் இல்லை!… பொருளாதார நிபுணர்!

Mon May 6 , 2024
Surjit Bhalla: கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 10 மில்லியனைத் தொட்டு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் சராசரியாக, முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று IMF-இன் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் பொருளாதார நிபுணருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த் பேட்டியில், 2004-2013 (யுபிஏ ஆட்சிக் காலத்தில்) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும், அப்போதுதான் ‘வேலையில்லா வளர்ச்சி’ என்ற […]

You May Like