fbpx

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றமில்லை..!! – பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஏப்ரல் 24ஆம் தேதியன்று இறுதித்தேர்வு முடிந்தன. இதையடுத்து, ஏப்.25ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வருவதால் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Read more: மீண்டும் தலை தூக்கும் கொரோனா.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இதோ..!!

English Summary

The Director of School Education announced that schools in Tamil Nadu will reopen on June 2nd after the summer vacation.

Next Post

"வாட் ப்ரோ..?" திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி.. சொன்ன அந்த வார்த்தையை நோட் பண்ணீங்களா..? 

Thu May 22 , 2025
Did you take note of the words spoken by Coimbatore Vaishnavi, who joined the DMK?

You May Like