நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் மூலமாகவே நன்கொடைகளைப் பெற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பல்வேறு மாவட்டங்களில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, இலவசமாக நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் பொழுது, மேற்கண்ட செயல்பாடுகளை நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் மூலமாக வழங்குமாறு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நம்ம ஸ்கூல் பௌண்டேஷன் அனுமதி பெற்ற பிறகே தங்கள் மாவட்டத்தில் மேற்கண்ட செயல்பாடுகளை செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட அறிவுரையினை முழுமையாக பின்பற்றி செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.