fbpx

முக்கிய அறிவிப்பு…! செய்முறைத் தேர்விற்கு 25-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுவராமவர்மா வெளியிட்ட செய்தி குறிப்பில்; ‘2022-23ஆம் கல்வியாண்டில் 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே 2012-ம் ஆண்டிற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம்.

அனைத்து தனித்தேர்வர்களும் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றப் பின்னரே தனித்தேர்வர்கள் எழுத்துத்தேர்வு என்ற கருத்தியல் தேர்வுக்கும் அனுமதிக்கப்படுவா். 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பம் செய்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிக்குச்சென்று 80% பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படித்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என அதில் கூறியுள்ளார்.

Vignesh

Next Post

#Tngovt: விவசாயிகளுக்குதமிழக அரசு சார்பில் ரூ.10,000 மானியம்...! எப்படி விண்ணப்பிப்பது...?

Thu Nov 10 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்‌ வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடி நீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ மற்றும்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கும்‌ தமிழக […]

You May Like