fbpx

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..! மூன்று உயிர்கள் பறிபோன பரிதாபம்…..!

தற்போதைய இளம் தலைமுறையினர் இடையே செல்போன் மற்றும் செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் மற்றும் செல்ஃபி மோகத்தால் பல்வேறு விபரீதங்களை அனைவரும் சந்தித்து வருகிறார்கள்.பலர் இந்த செல்போன் பயன்பாட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அதையும் மீறி செல்போனை பறித்தால் உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் அவர்கள் துணிந்து விடுகிறார்கள்.மற்றொருபுறம் பல ஆபத்தான சமயங்களில் ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க வேண்டும் என்று இளைய தலைமுறையினர் விரும்புவதால் பல உயிர்கள் பரிதாபமாக பரிபோகம் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தகுதியைச் சேர்ந்த சித்திக் (28 ) மற்றும் அவருடைய மனைவி நவ்ஃபியா நவ்ஷாத் (21) சென்ற 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த இளம் புதுமண தம்பதிகள் பல உறவினர்களின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டு வந்தார்கள்.

அந்த வகையில், ஒரு உறவினர் புதுமண தம்பதிகளை விருந்திற்காக அழைத்திருந்தார். அதன் பெயரில், புதுமண தம்பதிகள் இருவரும் பால்பள்ளி பஞ்சாயத்தில் இருக்கின்ற அன்சல்கான் என்பவரின் வீட்டிற்கு சென்ற சனிக்கிழமை வருகை புரிந்திருந்தார்கள்.

அங்கு திருமண தம்பதிகளுக்கு விருந்து உபசரிக்கப்பட்டது. மதிய உணவை சாப்பிட்டுவிட்டு புதுமண தம்பதிகள் இருவரும் அன்சல்கானுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஆற்றங்கரைக்கு சுற்றி பார்ப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது புதுமண தம்பதிகள் அவர்களுடைய கைபேசியில் செல்பி எடுக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. திடீரென்று அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்து இருவரும் மூழ்கி விட்டனர்.

இதைப் பார்த்த அன்சல்கான் ஆற்றில் குதித்து அந்த தம்பதிகளை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரும் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன், அந்த ஆற்றில் மீன்பிடிக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் காலணிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை தண்ணீரில் பார்த்ததால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு சடலங்களை மீட்டெடுத்துள்ளனர்.

Next Post

மக்களே...! இன்று முதல் அமலுக்கு வரும் 4 புதிய மாற்றங்கள்…! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

Tue Aug 1 , 2023
மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வந்த […]

You May Like