fbpx

பொதுமக்களே கவனம்…! வந்தது புதிய கட்டுபாடு…! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு…!

உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும். உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணென் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பின்போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக ஒரு முறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும், புதிய எண்ணெய் சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

இனிப்பு கார வகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது. மேலும், அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் குறிப்பிட்ட அளவை மீறக்கூடாது. தூய்மையாக கழுவிஉணவுப் பொருள் தயாரிப்பு, விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு கலன்களை தூய்மையாக கழுவி நன்றாக உலர்த்த வேண்டும். உணவு சமைக்கும், கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும். பேக்கிங் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள் மீது உணவுப் பொருளின் விவரங்கள் அச்சிடப்பட வேண்டும்.

விவரச்சீட்டு எளிதில் அழிய கூடிய வகையிலோ, கிழியக் கூடிய வகையிலோ, ஸ்டிக்கர் வடிவிலோ இருக்கக்கூடாது. உணவுப் பொருட்கள், எண்ணை பலகாரங்கள் பரிமாறும்போது இலை அல்லது தட்டுகள் பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை அச்சிடப்பட்ட தாள்கள், செய்தித் தாள்களில் வைத்து பரிமாறவோ, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யவோ கூடாது. தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், பொது மக்கள் 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

Vignesh

Next Post

TnGovt: பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்திற்கும் 24 நாட்கள் விடுமுறை...! தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்...! முழு விவரம்...

Thu Oct 13 , 2022
அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில், 5 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட, 24 அரசு பொது விடுமுறை நாள்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; “மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

You May Like