சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) நடத்திய ஆய்வில், மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படாத மைக்ரோபிளாஸ்டிக்குகள்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவை செல்லக்கூடிய பாதை, உருமாற்றம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களிடமும், மனிதர்களிடமும் ஏற்படுத்தும் நச்சுத்தன்மை விளைவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக் பரவுவதற்கு பங்களிக்கும் பல்வேறு ஆதாரங்களில், மாசடைந்த கழிவு நீர் ஒரு முக்கிய ஆதாரமாக நிற்கிறது என்று […]

தூக்கி எறியப்படும் சிப்ஸ் பாக்கெட் கவர்களில் இருந்து (Sunglasses) கருப்பு கண்ணாடிகளை தயாரித்து புனேவை தளமாக கொண்ட ஆஷாயா நிறுவனம் அசத்தியுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை கண்டறிய முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் சிப்ஸ் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து கருப்பு கண்ணாடிகளை (Sunglasses)புனேவை […]

உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த […]

சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டினை தவிர்க்கும்‌ வகையில்‌ தமிழக அரசு சார்பில் பொதுமக்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டும்‌, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டும்‌ தீவிர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின்‌ அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல்‌ செய்து அபராதம்‌ விதிக்கவும்‌. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தும்‌ நிறுவனங்களின்‌ தொழில்‌ உரிமத்தை ரத்து […]