fbpx

சற்றுமுன்..! நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 31 முதல் ஆக.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தொடர் மழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

English Summary

The District Collector has ordered a holiday for all the schools in the Nilgiris district today.

Vignesh

Next Post

அதிகாலையிலேயே அதிர்ச்சி!. ஹவுரா ரயில் தடம் புரண்டு விபத்து!. 18 பெட்டிகள்!. 60 பேர் காயம்!. ஒருவர் பலி!.

Tue Jul 30 , 2024
Early morning shock! Howrah train derailment accident! 18 boxes!. 40 people injured! One victim!

You May Like