fbpx

ஜாலி…! பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 13-ம் விடுமுறை நாளாக அறிவிப்பு…! இந்த மாவட்டத்தில் மட்டும் தான்…!

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் வரும் 13-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை அடுத்த திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். வரும் 12-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், மறுநாள், 13-ம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் 13-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1-ம் தேதி பணி நாளாகவும், ஏப்ரல் 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக செயல்படும், என அறிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஹாலிவுட் படம் பார்த்தால் சிறுவர்களுக்கு சிறை!... பெற்றோரும் தண்டனை அனுபவிக்கவேண்டும்!... வடகொரியா அதிரடி!

Fri Mar 3 , 2023
வடகொரியாவில் சிறுவர்கள் ஹாலிவுட் படம் மற்றும் தென் கொரியாவின் படங்களைப் பார்த்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் ஆட்சியாக இல்லாமல் அவரின் குடும்ப ஆட்சியாகத்தான் நடைபெறுகிறது. தென் கொரியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களைக் கடுமையாக தவிர்க்கும் வடகொரிய அதிபர், நாட்டு மக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் […]

You May Like