fbpx

நாளை மற்றும் வரும் 9-ம் தேதி மதுபான கடைகள் இயங்காது…! வெளியான புதிய அறிவிப்பு…!

நாளை மற்றும் வரும் 9-ம் தேதி மதுபான கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 02.10.2022 – ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி அன்றும்‌ மற்றும்‌ 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை நபிகள்‌ நாயகம்‌ பிறந்ததினம்‌ அன்றும்‌ தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தின்‌ கீழ்‌ செயல்பாட்டில்‌ உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌, அவற்றுடன்‌ இணைந்த மதுக்கூடங்கள்‌ மற்றும்‌ FL-3, FL-3A, FL-4A உரிமம்‌ பெற்ற தனியார்‌ ஓட்டல்களின்‌ மதுக்கூடங்கள்‌/முன்னாள்‌ படைவீரர்‌ மது விற்பனைக்கூடம்‌ அனைத்தும்‌ 01.10.2022 இரவு 10.00 மணி முதல்‌ 3.10.2022 காலை 12.00 மணி வரையும்‌ மற்றும்‌ 08.10.2022 இரவு 10.00 மணி முதல்‌ 10.10.2022 காலை 12.00 மணி வரையும்‌ மதுபானங்கள்‌ விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும்‌ செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில்‌ ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

இன்று நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டத்தில் கனமழை...! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்...!

Sat Oct 1 , 2022
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

You May Like