fbpx

கவனம்…! வரும் 25-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!

தமிழக அரசு சார்பில் வரும் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ 4-ம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்‌ துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்‌ தேர்வு அனுப்பப்படும்‌. எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்துள்ள நபர்கள்‌ தனியார்துறையில்‌ வேலைக்கு சென்றால்‌ அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில்‌ பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு விற்பனையாளர்‌, மார்க்கெடிங்‌ எக்ஸ்க்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌,கம்ப்யூட்டர்‌ ஆப்பரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌,போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்‌. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும்‌ பள்ளிப்படிப்பு முடித்த ஆண்‌, பெண்‌, மூன்றாம்‌ பாலினத்தவர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உட்பட அனைத்துவித கல்வித்‌ த௫சூதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும்‌, விருப்பம்‌ உள்ள நபர்கள்‌ அனைவரும்‌ வருகின்ற 25.11.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்துக்‌ கொண்டு பயன்‌ பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜேசன் டேவிட் காலமானார்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Wed Nov 23 , 2022
பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜேசன் டேவிட் உடல் நலக்குறைவால் காலமானார். பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் டாமி ஆலிவராக நடித்து மிகவும் பிரபலமான ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49. நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. 1993 முதல் 1996 வரை இயங்கிய மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸில் படத்தில் நடித்ததை […]

You May Like