இத்தாலியில் உள்ள நோயாளி ஒருவர், சிறுநீரக மருத்துவரிடம் 400,000 யூரோ இழப்பீடு கோருகிறார். அது ஏன் என்பதே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மருத்துவர்களால் ஆணுறுப்பு தவறாக துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் இத்தாலியை சேர்ந்த நபர் 400,000 யூரோ (£354,000) இழப்பீடு கோருகிறார். அறுவை சிகிச்சையின் போது, மருத்துவ நிபுணர்கள் அவரின் பிறப்புறுப்பை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில், அவர்கள் உறுப்பில் புற்றுநோயைக் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. உண்மையில் அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு வகை சிபிலிஸ் இருந்தது, அதை மருந்து மூலம் சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால், அந்த நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதுவும் தவறாக நடைபெற்றுள்ளது. நவம்பர் 2018ஆம் ஆண்டு டஸ்கன் நகரமான அரெஸ்ஸோவில் உள்ள சான் டொனாடோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது 68 வயதான அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதி கிளாடியோ லாராவால் அடுத்த மாதம் அரெஸ்ஸோவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணையில் விசாரிக்கப்படும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமா? என்பதை அவர் முடிவு செய்வார். அறுவை சிகிச்சை செய்த நிபுணர் மிகவும் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.