திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகத்தில் 2வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் இவர் தரணி குழுமம் என்ற பெயரில் குவாரி, ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே செப்டம்பர் மாதம் இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு என்பது குறிப்பிடத்தக்கது.