fbpx

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!! பெரும் பரபரப்பு..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், அமைச்சரின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்றிருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும் என தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின் போது அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்துச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த சோதனையால் தலைமைச்செயலகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Chella

Next Post

நடிகர் கசான் கான், பிரபல வில்லன் மாரடைப்பால் மரணம்..!

Tue Jun 13 , 2023
மலையாளம், தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கந்தர்வம், சிஐடி மூசா, தி கிங், வர்ணபகிட்டு போன்ற படங்களிலும், தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ், மேட்டுக்குடி, முறை மாமன், பிரியமானவளே உள்ளிட்ட 50 படங்கள் மூலம் எல்லோருடைய விருப்பமான நடிகராக வலம்வந்தார்.

You May Like