குரங்கு அம்மை நோயை குணப்படுத்த, பெரியம்மை நோய்கான தடுப்பூசியை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியது.
இத்தொற்று, பல்வேறு பாலினத்தருடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களிடம் அதிக அளவில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிப்புகளின் அறிகுறிகளாக கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகும். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரியம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் ‘இமான்வேக்ஸ் ‘ தடுப்பூசியை குரங்கு அமைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.