fbpx

#Result; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்… இன்று மதியம் 12 மணிக்கு…! எப்படி பார்ப்பது…?

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பட்டியலில் இடம் பெறாத தேர்வெண்களுக்கான விடைத்தாட்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடுத்தவன் சாதனையில் அட்ரஸ் ஒட்டுவது தான் உங்க வேலையா...? முதல்வரை விமர்சித்த அண்ணாமலை...!

Fri Sep 16 , 2022
அடுத்தவர் சாதனைக்கு அட்ரஸ் ஒட்டுவதே திமுகவின் வேலை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மிகுந்த நலிந்த நிலையில் இருந்த போதிலும், பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப் போய்க் கொண்டிருந்தன. இந்த நிலை மாற, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்கள், மத்தியில் […]

You May Like