கோவிட் காரணமாக உயிரிழந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலன் திட்டக் குழுவின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பத்திரிகையாளர் நலன் கூட்டத்தில் மொத்தம் 1.81 கோடி ரூபாய் வழங்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, கோவிட்-19 காரணமாக உயிரிழந்த ஊடகவியலாளர்களின் 123 குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய ஒப்புதல்களுடன், நடப்பு கூட்டத்தில், மொத்தம் 139 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.. இந்த கூட்டத்தில் PIB முதன்மை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ ஜெய்தீப் பட்நாகர், இணைச் செயலர் (I&B) ஸ்ரீ விக்ரம் சஹாய் மற்றும் குழுவின் பத்திரிகையாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்..
இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர் மரணம் அடைந்தால், பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. நிரந்தர இயலாமை, கடுமையான விபத்துக்கள் மற்றும் பெரிய உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் பத்திரிகையாளர்களுக்கு உதவியும் வழங்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் 134 பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ. 6.47 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..