fbpx

விபச்சார விடுதியாக மாறிய பண்ணை வீடு..! விசாரணையில் சிக்கிய பாஜக துணைத் தலைவர்..!

பாஜக மாநில துணைத் தலைவர் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டை, விபச்சார விடுதியாக பயன்படுத்தி வந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேகாலயா மாநில பாஜகவின் துணைத் தலைவராக இருப்பவர் பெர்னார்டு என். மராக். இவருக்கு சொந்தமாக மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதாகவும் அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. முதலில் பாஜக முக்கிய நிர்வாகிகளில் வீடு என்பதால் போலீசார் தயக்கம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

விபச்சார விடுதியாக மாறிய பண்ணை வீடு..! விசாரணையில் சிக்கிய பாஜக துணைத் தலைவர்..!

இந்நிலையில், நேற்றைய தினம் சர்ச்சைக்குள்ளான பண்ணை வீட்டில், தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என 6 பேரை மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பண்ணை வீட்டை பூட்டி சீல் வைத்தனர். மேலும், குழந்தைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவர்கள் உட்பட 73 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் போது, மராக் ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொழில் செய்வற்காகவே விடுதி போல நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.

விபச்சார விடுதியாக மாறிய பண்ணை வீடு..! விசாரணையில் சிக்கிய பாஜக துணைத் தலைவர்..!

மேலும், அங்கிருந்து 400 மது பாட்டில்கள், 500க்கும் மேற்பட்ட காண்டம் பாக்கெட்டுகள், 27 வாகனங்கள், 47 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளதாக பெர்னார்டு தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஆகஸ்ட் 3 முதல் அரசு விரைவு பேருந்துகளில் புதிய வசதி..! ஆயத்தப் பணிகள் தீவிரம்..!

Sun Jul 24 , 2022
அரசு விரைவு பேருந்துகளில் கூரியர், சரக்கு போக்குவரத்தை ஆக.3 முதல் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ”தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகளின் சுமைப் பெட்டியை மாத வாடகைக்கு விடும் திட்டம் ஆக.3 முதல்செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, விரைவுப் பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டியை வணிகர்கள் நாள் […]
தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

You May Like