fbpx

குஞ்சுகளை கருவில் சுமக்கும் தந்தை விலங்கு!… எத்தனை புயல் வந்தாலும் ஒன்னும் செய்யமுடியாது!… கடற்குதிரைகள் பற்றிய சுவாரஸ்யம்!

கடற்குதிரை(Sea horse) என்பது கடலில் வாழும் ஒரு வகை மீனாகும். இதில் மொத்தம் 46 வகைகள் உள்ளன. பிற மீன்களைப் போலவே இதற்கும், செவுள்களும், துடுப்புகளும் உள்ளன. எனினும் இது மீனைப் போல் வடிவம் கொண்டதன்று. தலைப்பகுதி குதிரையைப் போன்று இருப்பதால் இது கடல் குதிரை என்றழைக்கப்படுகிறது. இப்போகாம்பசு என்பது இதனுடைய அறிவியல் பெயராகும். கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும், சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம். உடலமைப்பைப் பொறுத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது.

உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 1.5 முதல் 35.5 செ.மீ (0.6 முதல் 14.0 அங்குலம்) வரை இருக்கும். முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கடல் குதிரைகள் பெரும்பாலும் உலகம் முழுவதும் ஆழமற்ற வெப்பமண்டல மற்றும் மிதமான உப்பு நீரில் காணப்படுகின்றன,சீக்ராஸ் படுக்கைகள்,கரையோரங்கள், பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற அடைக்கலமான பகுதிகளில் வாழ்கின்றன.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200-1500) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 1000 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். 0.5% க்கும் குறைவான குஞ்சுகள் மட்டுமே தப்பிப் பிழைத்து வாழ்கின்றன. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் வாழ்விட அழிவின் விளைவாக கடல் குதிரைகள் ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

கடல் குதிரைகள், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் தன்மை கொண்டவை. ஆனால் இவை தன்னுடைய ஜோடியைக் கவர்வதற்காக மட்டுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. ஆண், பெண் என இரண்டு கடல் குதிரைகளுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும். கடல் குதிரையின் வால் பகுதியானது, தாவரங் களைப் பற்றிக்கொள்ளவும், சிறிய வகையான உயிரினங்களை பிடித்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. அதிக நீரோட்டம் உள்ள பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லாமல் இருப்பதற்காக, இவை தாவரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன.

இவற்றின் வால்கள் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக பயன்ப்படுகிறது. கடல் குதிரை தங்கள் சக்திவாய்ந்த வால்களை உணவுக்கு சண்டையிடவும், புயலின் போது நங்கூரமிடுவதற்கும் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இவை உயிருடன் வாழ கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட உப்பு இறால்களை உட்கொள்ளலாம். நண்டுகளுக்கு மிக பிடித்த உணவாக கடல் குதிரை உள்ளது.

Kokila

Next Post

மாணவர்களே..!! தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Mon Oct 30 , 2023
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தொடர்ந்து விடுமுறைகள் வருவதால், பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து, அக்டோபர் 9ஆம் தேதியும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டனர். இந்நிலையில், நிலையில் சமீபத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

You May Like