fbpx

குடித்துவிட்டு பாடம் நடத்திய பெண் ஆசிரியர்… வகுப்பறையில் இருந்து மது பாட்டில் பறிமுதல்..!

கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கங்கா லெட்சுமால் என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். அந்த ஆசிரியர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. மேலும், லெட்சுமால் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்திவிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை எதையும் பொருட்படுத்தாமல் ஆசிரியை கங்கா லெட்சுமால் தொடர்ந்து குடித்து விட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். எனவே, இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆசிரியை கங்கா லெட்சுமாலிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், கங்கா லெட்மால் அறைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது மேசை ட்ராயரில் மது பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடரந்து மது பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆசிரியை கங்கா லெட்சுமாலை சஸ்பெண்ட் செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

அதிமுக அலுவலகத்திற்கு விசிட் அடிக்கும் ஓபிஎஸ்? டிஜிபியிடம் பரபரப்பு புகார் கொடுத்த ஜெயக்குமார்..!

Fri Sep 9 , 2022
அதிமுக அலுவலகத்திற்கு வர ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக தொண்டர்களின் கோயிலாக உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் சூறையாடி பொருட்களை சேதப்படுத்தியதோடு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், […]
’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

You May Like