fbpx

பண்டிகை சீசன் வந்தாச்சு!. பட்டு புடவைகளை பராமரிக்க இந்த எளிய டிப்ஸை பின்பற்றுங்கள்!

Sarees: விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தான புடவை என்றால் அது பட்டு புடவை தான். பண்டிகை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் பட்டுப்புடவை கட்டினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான். உலக அளவில் பல பெண்களும் அணிய விரும்பும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.

பட்டு சேலையை வீட்டில் துவைப்பதைவிட டிரைவாஷ் கொடுப்பது உத்தமமானது. அதுபோல் பட்டு சேலையை அயர்ன் மடிப்புடன் நீண்டநாள் வைத்திருக்க கூடாது. பிறகு பட்டு புடவை எடுக்கும் போது மடிப்பு படிப்பாய் இழைவிட்டு விடும். பட்டு புடவையை அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும். அதுபோல் இதமான வெயிலில் அவ்வப்போது காயவைத்து பாதுகாக்க வேண்டும். பட்டு சேலையின் மீது ஏதும் கறை படிந்தால் உடனே சாதாரண தண்ணீர் கொண்டே துடைத்து விடவும். அதிக கறை எனில் டூத்பேஸ்ட் கொண்டு துடைத்து விடலாம். பட்டு சேலை பளபளப்புடன் திகழ சிறந்த பராமரிப்பும் அவசியம்.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும். எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும். பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும். அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

Readmore: உங்க குழந்தைகள் விரல் சூப்புகிறார்களா?. அலட்சியம் வேண்டாம்!. இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்!

English Summary

The festive season is here! Use these simple tips to care for silk sarees!

Kokila

Next Post

வேலையில் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான சீன பெண்..!! இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?

Mon Oct 28 , 2024
Young Woman Suffers Psychological Breakdown After Getting Scolded At Work; Know What is Catatonic Stupor She Underwent

You May Like