நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது. இனி 2000 நோட்டுகள் உங்கள் கையில் இருந்தால் உடனே வங்கிக்கு சென்று மாற்றிக்கொள்ளுங்கள். அக்.7ஆம் தேதிதான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி நாள் ஆகும்.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்கான அவகாசத்தை அக்டோபர் 7ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்தது. எனவே, நாளை இறுதி நாள் என்பதால், கடைசி நேர சிக்கலை தவிர்க்க, இன்றே ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் திரும்ப செலுத்தலாம். இதற்கு மேல் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.