மக்களவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசிநாள். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் இதுவரை 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில். 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது.
28-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. புதுச்சேரி தவிர்த்து 39 மக்களவை தொகுதிகளிலும் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசிநாள் ஆகும்.