மாரடைப்பு ஆபத்தை குறைக்கும் சோயா!! எப்படி சாப்பிடுவது சிறந்தது!!

சோயா உணவுகள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சோயா உணவுகள் இதயத்தை பாதுகாக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், வாரத்திற்கு ஒருமுறை சோயா உணவுகளை சாப்பிட்டு வந்தால் மற்றவர்களை காட்டிலும் மாரடைப்பு வரும் ஆபத்து 17% சதவிகிதமும் பக்கவாதம் வரும் ஆபத்து 18 சதவிகிதம் குறைவு என ஆய்வுகள் கூறுகின்றனர்.

சோயாவில் உள்ள பைடோஸ்ட்ரோஜெனில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளது. இது தமனியின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும், தினமும் 25 கிராம் அளவு சோயா புரதம் எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைய உதவுவதோடு இதய நோய் வரும் ஆபத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஓரளவிற்கே பயன் தரும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தினமும் 25 கிராம் அளவு சோயா புரதம் எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைய உதவுவதோடு இதய நோய் வரும் ஆபத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஓரளவிற்கே பயன் தரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

சோயா உணவுகளை அதிகமாக டயட்டில் சேர்த்துக்கொள்வதால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். சிலருக்கு சோயா உணவுகள் அலர்ஜியை உண்டாக்கும். அதேப்போல் தைராய்டு பிரச்னை அல்லது ஹார்மோன் சென்சிடிவான புற்றுநோய் உள்ளவர்கலுக்கு இது ஹோர்மானில் விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் அளவாக உண்டால் பெரும்பாலான நபர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.அதிக பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்களான சோயா புரத ஐசோலேட்ஸ் சில புரொட்டீன் பார் மற்றும் ஜூஸ்களில் உள்ளது. இதில் முழு சோயா உணவுகளில் கிடைக்கும் அதேப்போன்ற பயன்கள் கிடைக்காது. மேலும் இதில் சேர்க்கைப் பொருட்களும் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்களும் பயன்படுத்துவதால் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read More: TN Exit Poll Result 2024: ‘தமிழ்நாட்டில் யாருக்கு எவ்வளவு இடம்..!’ அதிமுக, பாஜக எவ்வளவு வாக்குகள் பெறும்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

Baskar

Next Post

கற்றாழையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Sun Jun 2 , 2024
கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை.எந்த காலநிலையிலும் எளிதில் வளரக்கூடியது. இதனை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. வாஸ்து மற்றும் ஜோதிஷ்ய பண்டிதர்களின் கூற்றுப்படி, சில செடிகள் வீட்டில் வளர்க்க ஏற்றது.அதிலும் நேர்மறை ஆற்றலைப் பரப்பக்கூடிய தாவரங்களை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது கற்றாழைதான். மருத்துவ குணம் கொண்ட கற்றாழை: கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.கற்றாழையில் […]

You May Like